Wednesday, April 22, 2015

1. ஸ்லோகம் ஒன்று - சாதனாப்யாசம்


1 ஸ்லோகம் ஒன்று - சாதனாப்யாசம்
 
 

Veda should always be assiduously reflected.
Actions in furtherance of that Wisdom should be pursued.
By those actions, (That Prime Existence) should be propitiated.
Desires should be disengaged from Mind.
The stream of de-merits should be cleansed.
Imperfection in temporal pleasures should be identified.
Desire for one’s Self should be properly organized.
One should return again to one’s own true abiding place.

_________________________________________________________

 

வேதம்-தன்னைக் கற்றிடு தினமுமதனைச் செய்திடு
வேதம்-தன்னில் சொன்ன-கர்மம் தன்னை-முயன்று புரிந்திடு
புரியும்-கருமம் யாவையும் அவனுக்கென்று புரிந்திடு
அவனில்-அன்றி வேறு-ஆசை தள்ளி-அவனை வழி-படு
அதற்கு-முதலில் பாபச்செயல்கள் தன்னை-அகற்றி உயர்ந்திடு
சிறிய-இன்பம் நிலைத்திடாத குறையதென்று உணர்ந்திடு
ஆன்மப்-பற்றைப் பற்றிடும் ஆசை-ஒன்றைக் கொண்டிரு
ஆன்மம்-தன்னைக் கண்டிட முயன்றுன்-னுள்ளே தேடிடு

1.1           வேதம்-தன்னைக் கற்றிடு  தினமுமதனைச் செய்திடு

 
வேதம்-தன்னைக் கற்றிடு தினமுமதனைச் செய்திடு
வேதம்-என்ப.. தென்ன-வென்று..ணர்ந்து-நீசெ..யல்படு
முழுமையான ஞானம்-ஒன்றே வேதமென்று ஆகுது
சொன்ன-சொல்லின் கூட்டமல்ல வேதம்-என்றி..ருப்பது
வேதமந்த பரமனாம் பரமன்-தன்னின் ஞானமாம்
எனவே-வேத ரூபன்-என்று பரமனுக்கு நாமமாம்


வேதம்-என்ற மந்திரம் ஒதல்-வேதம் ஆகுமா ?
வேதம்-ப்ரம்ம ஞானம்-என்கில் ஞானம்-சொல்லில் விளங்குமா ?
தென்படாத ஒன்று-மட்டும் அல்ல-ப்ரம்மம் என்பதாம்
சொல்படாத ஒன்றும்-ஆகும் என்பதுமே வேதமாம்

முதல்-எழுந்த ஒன்று-வேதம் என்று-சொல்ல லாகுது
அதைத்-திரும்பச் ஓதும்போது அதன்-முதன்மை போகுது
என்பதனால் சொன்னதல்ல ஸ்ச்புரித்தழுந்த..தே-அது
நாம்-முயன்..றதை-நமக்கு ஸ்புரிக்கச் செய்தல்-என்பது
சங்கரரின் “சாதனயின் போதனை”யாய் மிளிருது

நான்கு-வேத க்ரந்தம்-மற்றும் வேத-அங்க சாத்திரம்
யாவும்-குறையின் பட்டதாகும் கறைபடாத பரமன்-முன்
என்று-சொன்ன முண்டகமும் சொல்வதொன்று வேதமாய்
பரமன்-பற்றி ஞானம்-ஒன்று ஞானம்-ஒன்று மட்டுமே

வேதமந்தி..ரங்கள்-யாவும் த்யானம்-கொள்ளப் பொருளுமாம்
அதனைக்-கொள்ள கோதைத்-தள்ள ஞானம்-மெள்ள விளங்குமாம்    
வேதம்-கொண்ட ஞானம்-தன்னில் ஞானம்-கொள்ளல் ஞானமாம்
பிறகு-வேதம் ஞானம்-ரெண்டும் ஒன்றில்-ஒன்று ஆகுமாம்

பரமன்-தன்னை அறிதல்-என்ற சாதனையில் உதவுமாம்
வேதம்-தன்னில் கண்ட-விண்ட மந்திரங்கள் யாவுமாம்
அதன்-பயனாய் ப்ரம்ம-ஞானம் கொள்ளல்-ஒன்றே வேதமாம்
வேத-மந்தி..ரம்-அறிதல் மட்டுமல்ல வேதமாம்

நிலவைச்-சுட்டிக் காட்ட-குச்சி உதவிடுது என்பதால்
குச்சி-நிலவு ஆகுமா குளிர்ச்சி-தந்து உலவுமா
என்பதுபோல் வேதமாம் இறைவன்-தன்னைக் காட்டுமாம்
இதை-உணர்ந்து கற்றலே வேதம்-கற்றல் ஆகுமாம்

வேத-அந்த உபநிடதம் கூட-இதனைச் சொல்லுது
ஆதி-மூலன் இறைவன்-பரமன் தன்னை-அடைய உழைப்பது
என்பதந்த சேவை-செய்து மனதைக்-கழுவி இருப்பது
அதற்கு-வேதம் உதவுமாறு இருக்கு-என்று அறிந்திடு
 
இதனை உணர்ந்து த்யானம்-கொள்ள யாவும்-விளங்கலாகுது
என்று-சொல்ல சங்கரரும் தந்ததிதாய் ஆகுது
நன்கு-மனதில் இதனைக்-கொள்ள வேதம் உதவலாகுது
கணமும்-இதனைக் கொள்ளல்-ஒன்றே வேதம்-ஓதல் ஆகுது
 

1.2      வேதம்-தன்னில் சொன்ன-கர்மம் தன்னை-முயன்று புரிந்திடு


வேதம்-தன்னில் சொன்ன-கர்மம் தன்னை-முயன்று புரிந்திடு
அந்த-கர்மம் என்ன-வென்று அறிந்து-அதனில் முயன்றிடு
மனனம்-செய்து வேதம்-தன்னை நித்தம்-ஓதல் என்பது
உணவு-தன்னின் மணத்தில்-மயங்கி உண்ணல்-விடுதல் போலதாம்

 வேதம்-சொன்ன கருமம்-என்ன என்று-எண்ணப் புகுகையில்
கொண்ட-மனது அலைதல்-விட்டு நிலைக்கத்-தூய்மை வேண்டிய
செய்த-யாவும் நல்ல-கருமம் என்று-சொல்லல் ஆகுது
என்பதனால் சேவை-தன்னை உளம்-கனிந்து புரிந்திடு
அந்த-சேவை தன்னை-தன்னை மறந்து-நீ-பு..ரிந்திடு
உந்தன்-நினைவை பேரை-அகற்றி பேரைக்-காக்க முயன்றிடு
நல்ல-கருமம் இறைவன்-தாளில் மலருமாக சேர்த்திடு
எந்த-நாளும் இதனை-எண்ணி உந்தன்-தகுதி-வளர்த்திடு
 
ஐந்து-கர்மம் வேதம்-சொன்ன யக்ஞம்-என்றே ஆகுது
அவைகள்-புரிய நாம்-புரிந்த *அறியாப்-பழி நீங்குது
அதன்-பலனாய் நெஞ்சத்-தூய்மை சித்தத்-தூய்மை வளர்க்குது
எமன்-வருகை தன்னில்-பயமும் தன்னாலே-சென்..றோடுது
 

* கீழ்க்கூறிய ஐந்து ய க்ஞங்களைச் செய்யுங்கால், நாம் அறியாமல் செய்த பாவங்கள் (அறியாப்-பழி )விலக்கு பெறுகின்றன


வேத-சாத்தி..ரங்கள்-மற்றும் ரிஷிகள்-தந்த மந்திரம்
போதனைக..ளாக *மண்ணில் வந்த-புருடர் தந்ததும்
ஏக-சிந்தை..யாகக்-கொண்டு அதன்-பொருளில் நடந்திட
ப்ரம்ம-யக்ஞம் என்பதாக அந்த-கருமம் ஆகுது

இறைவன்-தாளைப் போற்றிச்-செய்யும் எந்த-கருமம் ஆயினும்
பெருமை-வேண்டி கர்வம்-கொண்டு செய்திடாமல் ரஹஸ்யமாய்
மனதளவில் உன்னளவில் அடக்கம்-கொண்டு புரிந்திடில்
பூஜை-என்றே ஆகுது தேவ-யக்ஞம் தானது


நாத-உலகில் ப்ரம்மம்-தன்னை தெய்வமாக உணர்ந்திட
பூத-உலகில் அன்னை-தந்தை தெய்வம்-என்று உணர்ந்து-நீ
அவர்க்குச்-சேவை செய்து-அவர் மனம்-மகிழ்ச்சி கொண்டிட
செய்யும்-கருமம் யாவும்-நல்ல பித்ரு-யக்ஞம் ஆகுது

இந்த-உலகில் நொந்த- மாந்தர் கொண்ட-துன்பம் போக்கிட
செய்த- கருமம் யாவும்-மனுஷ்ய யக்ஞம்-என்று ஆகுது
அந்த-நாளில் வந்த-ராமன் தொட்டு-மண்ணில் பின்னரே
உண்மையாக வந்த-ராமன் சொன்ன-சொல்-நல் வேதமே
கண்ணனாக வந்த-ப்ரம்மம் சொன்ன-கீதை சாரமே
இறைவன்-ஏற்க ஏங்கும்-பூஜை நோவைப்-போக்கும் சேவையே

அசைவது-தான் உயிர்-என நினைப்பது-தான் நம்-குறை
உலகில்-உறை எதுவும்-இறை என்பது-தான் நான்-மறை
பிற-உயிர்கள் யாவையும் மரம்-செடி-கொடி இலையையும்
தனதுமாகக் கண்டிட அதற்குச்-சேவை செய்திட
அதுவும்-பூஜை ஆகுது பூத-யக்ஞம் தானது


இறைவன்-தன்னை அறிய-உண்மை ஞானம்-தன்னைக் கொண்டிட
ஒன்று-அல்ல பிரிதொரு கொள்கையினில் நம்பிக்கை
வைத்தல்-அன்றி உண்மையாம் தன்மை-கொண்டு மனதுடன்
புத்தி-மற்றும் புலன்களை அடக்கி-இறைவன் அருளினை
வேண்டிக்-காத்து இருத்தலே வேண்டிய-நல் தகுதியாம்

வேதம்-சொன்ன நல்ல-கர்மம் போதம்-தந்து இறைக்கு-நம்மை
அழைத்துச்-செல்லும் பாதையாம் வழி-கொடுக்கும் மொழியுமாம்
அதனில்-கொண்ட போதையால் சாதனையின் சித்தினால்
தினம்-மயங்கி கர்வமாய் இருக்கத்-தடம் புரளுமாம்
இதையுணர்ந்து அடக்கமாய் கதை ஒழிந்து மௌனமாய்
இருத்தல்-ஞானம் அருளுமாம் கீதை-தந்த பொருளுமாம்

1.3   புரியும்-கருமம் யாவையும் அவனுக்கென்று புரிந்திடு


புரியும்-கருமம் யாவையும்-நீ அவனுக்கென்று புரிந்திடு
புரியும்-கருமம் தன்னின்-பலனைக் கருதல்-தன்னை விட்டிடு
புரியும்-முன்னர் அவனின்-தன்மை என்ன-வென்று அறிந்திடு
புரியும்-பின்னர் அவனுக்கில்லை-தன்மை என்று-அறிவொடு
சரியும்-தவறும் அவனுக்கில்லை திரிபும்-உருவும் அற்றது
விரியும்-அண்டம் கொண்டு-அடங்கும் பிண்டம்-என்று உணர்ந்திடு

தெரியும்-உலகில் திரியும்-யாவும் அவனின்-ரூபம் என்றிடு
கோவில்-தன்னில் உள்ள-கல்லில் மட்டுமல்ல புரிந்திடு
கால-நேர தேசம்-என்ற பூதகத்தைக் கடந்தது
மேலும்-கீழும் அற்ற-ஆதி ஆக-நின்ற வித்தது

உன்னில்-என்னில் உறையும்-உண்மை தன்னுக்காக புரிந்திடு
மண்ணில்-விண்ணில் கரையும்-திடத்தின் தன்மைக்காகப் புரிந்திடு
சொல்லில்-சொல்ல முடிந்திடாத சொல்லுக்காகப் புரிந்திடு
செயல்படாமல் செயல்-நடத்தும் துயிலுக்காகப் புரிந்திடு

போகப்-போக புரிய-வைக்கும் புதிருக்காகப் புரிந்திடு 
ஏக-ரூப நாத-ரூப அன்புக்காகப் புரிந்திடு
புரியும்-கருமம் யாவையுமே அதற்கெனவே புரிந்திடு
உனது-பிறவி எதற்கெனவே புரியும்-புரியும் புரிந்திடு

 

1.4   அவனில்-அன்றி வேறு-ஆசை தள்ளி-அவனை வழி-படு

அவனில்-அன்றி வேறு-ஆசை தள்ளி-அவனை வழி-படு
எவனை-பற்றி அறிய-எதுவும் விளங்கும்-என்று அறிந்திடு
அவனைப்-பற்றி அவனைப்-பற்றி ஞானம்-பற்ற வழிபடு
அவனைப்-போற்றி அவனைக்-காட்டி எமனை-ஒட்டி பிழைத்திடு

கண்ணன்-அன்று கீதையிலே சொன்ன-எதிரி இரண்டினில்
முன்னதாக நிற்பது ஆசை-என்ற ஒன்றுமாம்
அடுத்த-எதிரி கோபமோ ஆசையாலே விளைவதாம்
முதலை-வென்ற சித்தன்-தனக்கு கல்லொன்றிலிரு காய்களாம் 

புத்தன்-கூட ஆசைதன்னை குற்றவாளி என்கிறான்
சித்தம்-படும் பாட்டுக்காசை காரணமாய்ச் சொல்கிறான்
ஆசை-கொள்ள *ஆசை-கொல்ல ஆசை-ஒன்றே தோன்றுதாம்
ஆசைக்-காசை பலனெனவே சுழற்சியாக வருகுதாம்

*ஆசை-கொல்ல=ஆசையை தீர்த்து கொள்ள
 
ஆதலினால் ஆசை-என்ற ஒன்றினை-நீ ஒதுக்கியே 
இறைவனிடம் கூட-அதைக் கொண்டிடாமல் அவனுமாய்
ஆக்கும்-ஞானம் தன்னில்-மட்டும் செலுத்தி-முக்தி பெற்றிடும்
வழியைக்-காணல் வேண்டுமாம் அதுவே-அந்த தவமுமாம்
இதனைத்-தானே திருக்குறளார் திருக்குரலால் சொல்கிறார்
பற்றிடுவாய் பற்றற்றானை பற்றி-அதையும் விட்டிடக்
கற்றிடுவாய் கற்றபின்பு விளங்கும்-எதுவும் பட்டென

வேத-அந்த மைத்த..ரிய உபனி..டதம் சொல்லுது
புலன்கள்-தன்னின் சேட்டை-என்ற கேள்வி-தனக்குப் பதிலுமாய்
ஆசை-தன்னை மனதும்-தருது இதுவே-உண்மைக் கருத்துமாம்
இதனைப்-புரிந்து ஆசை-தன்னைத் தள்ள-முயல வேண்டுமாம்  

இந்தக்-கருத்தை வலியுறுத்திப் புலனை-அடக்கல் வேண்டுமாம்
அதன்-பிறகே மனதில் ஆசை என்பதுமே அடங்குமாம்
இந்த-பாடம் சங்கரரின் *நல்-விவேக மணியுமாம்
இதனைப்-புரிந்து நடக்கும்-மனது நல்-விவேக மணியுமாம்

*விவேக சூடாமணி

இந்தக்-கருத்தை உணர்ந்து-செயல்-பு..ரிந்திடாத ஒருவனை
என்ன-கற்றும் முக்தி-தன்னை அடையும்-சக்தி மறுக்குமாம்
பின்னர்-வேதம் வேத-அந்தம் ஓதல்-வெற்று வேஷமாம்
நல்ல-கானம் செவிடன்-காதில் ஒலித்தல்-போல ஆகுமாம்

ஜீவன்-முக்தன் தனக்குக்-கூட புலனடக்கம் தேவையாம்
அவனிடத்தில் சரணடைதல் தொடர்தல்-ஒன்றே யாகமாம்
உலகிருக்கும் வரையில்-கர்மம் புரிதல்-என்றும் வேண்டுமாம்
சரணடந்த மனதில்-அதனைச் செய்ய-லொன்றே தவமுமாம்

முக்தி-ஆசை தன்னைக்-கூடத் துரத்தல்-ஒன்றே வேண்டுமாம்
அந்த-ஆசை கூடப்-பிறகு அடிமையாக்கிக் கொல்லுமாம்
முக்தி-என்னும் நிலை-கொடுக்கும் ஆனந்தத்தின் எல்லையாம்
அதனைப்-பெற அடைதல்-என்ற ஆசைத்-தடை ஆகுமாம்

முக்தி-என்ப தடைதல்-அல்ல விடுதல்-என்று ஆகுமாம்
அடைந்திடுதல்-என்று கூற-ஆசை ஒன்று-அங்கே தொக்குமாம்
கிடைத்திடுமா என்று-அடிமை ஆக்கும்-அதுவும் ஆசையாம்
எதையும்-விட்டுத் *தனித்திருக்கும் நினைப்பிருக்கும் முக்தியாய்

*தனித்திருக்கும் நினைப்பு- அதுவொன்றே எல்லாமாய் இருக்கும் நினைப்பு (Supra Conciousness)

 முக்தி-அடைய செய்யும்-செயலும் பந்தத்திலே கட்டுமாம்
முக்தி-என்ற பலனுக்கின்றி செயல்-புரிதல் யோகமாம்
இதனைத்-தானே சரணம்-என்று கண்ணன்-கீதை சொல்லுதாம்
மனதின்-எண்ணம் தன்னை-விடுதல் பதஞ்சலியார்-யோகமாம்

தன்னை-யறிதல் என்ற-ஒன்றை பலன்-நினையாக் கடமையாய்ச்
செய்தல்-ஆகும் முக்தி-என்ற நிலையைத்-தரும் சாதனை
பற்றிடுவோம் பற்றற்றானின் பற்றளிக்கும் பற்றினை
அந்தப்-பற்றும் விடுதல்-ஒன்றே *சொந்தப்-பற்றின் ஒரு-விலை


*நமக்குச் சொந்தமாக நம்மைப் பற்றிஇருக்கும் ஆன்மம் என்ற பற்று. இதைத்தான் யோகத்தின் மூலம் மனதை ஒரு நிலைப் படுத்தும்போது( ஆசைகளற்று நிலைப் படும்போது-மனம் அற்றுப் போகும்போது) தன் சொந்த இயல்புடன் சுதந்திரமாக விளங்கலாம் என்னும் பொருள் பட  
ததா த்ரஷ்டு : ஸ்வரூபேஸ வஸ்தானாம் ||” என்று பதஞ்சலி யோக சூத்ரம் கூறுகிறது.

1.5   அதற்கு-முதலில் பாபச்செயல்கள் தன்னை-அகற்றி உயர்ந்திடு

இறைவழிபா..டென்னது என்று-நீ உணர்ந்திடு
நிறைகுடத்தில் பாலும்-தேனும் சொரிவதுதா..னா-அது
குறைவிலாமல் தினமும்-சோறு படைப்பதுதா..னோ-அது
ல்ல-கையில் மணியுருட்டி உரக்க-மந்தி..ரம்-படித்து

தீப-தூப பூஜை-தானும் ஆகிடும்-பொரு..ளா-அது
பொருளில்-அல்ல பாவத்திலே பூஜை-இருக்கு உணர்ந்திடு
வெளியில்-இல்லை உள்ளத்திருக்கு தெய்வ மும்-நீ உணர்ந்திடு
அழிவிலாத வகையில்-புண்யம் செய்து-நீ பிழைத்திடு

அதற்குப்-புண்யம் என்னவென்று யோசித்து-நீ செயல்படு
பாவச்-செயலை விடுவதுவே பெரிய-புண்யம் ஆகுமாம்
அதற்குப்-பிறகு செய்தல்-எதுவும் பூஜை-என்றே ஆகுமாம்
இதனை-உணர்ந்து நற்செயல்கள் புரிதல்-வேதக் கருமமாம்

நமனை-வெல்ல இதை-விடுத்து ஒன்று-சொல்லல் சிரமமாம்
*உதவும்-கரத்தைக் கொண்டிடு உதட்டில்-இனிமை கொண்டிரு
இதனை-விடவும் எளியது போதம்-எங்கே இருக்குது
பெரிய-நாலு வேதங்கள் அறிதற்கரிய சாத்திரம்
யாவும்-இதனில் இருக்குது அணுவிற்குள்ளே உலகது

 இதனைக்-கருத்தில் கொள்ள-எந்த செயலும்-புண்யம் ஆகுது
உனது-வார்த்தை இதன்-பிறகு தேனின்-சுவையை மிஞ்சுது
பாவம்-என்ற வார்த்தை-உன்னில் அர்த்தம்-இழந்து ஓடுது
உடலுக்குள்ளே உறையும்-தெய்வம் மகிழ்ந்து-உன்னை உயர்த்துது

*Help Ever Hurt never = Encompasses the wisdom found in all the scriptures. This is the ultimate Pooja. This is the greatest of all Sadhanaas propagated implicitly by Geetha, Naaradha Bhakthi Sutra and all other great scriptures..! This is the essence of all senses..!

When one follows this dictum, all requirements of a spiritual sadhanaa are ful-filled. Sat-Karma is about discriminating between Proper from ‘Pleasurable’. Your discriminating task becomes easier when you subject each of your activity to these questions “Does it hurt? , Does this of help? All activities that pass this test qualify to be Sat-Karma (Good activity).

1.6   சிறிய-இன்பம் நிலைத்திடாத குறையதென்று உணர்ந்திடு

மனம்-எழுப்பும் ஆசைத்-தீயில் விட்டிலாக மாறிடும்
குணம்தனைத் துறந்து-இன்பம் கணத்தில்-போகும் என்பதை
உணர்ந்திருந்து உத்தமத்தின் பட்ட-பெரிய இன்பமாம்
முக்தி-தன்னை அளிக்கும்-ஆசை தன்னைக்-கொள்ள முயன்றிடு

இந்த-உண்மை தனை-உணர்த்த கருணை-கொண்ட சங்கரரர்
நமை-நினைத்து நமை-உயர்த்த அருளிச்-செய்த தானது
பஜ-கோவிந்தம் எனும்-உயர்ந்த நிஜமுணர்த்தும் பாடலை
நிதமுணர்ந்து மனம்-நினைந்து வாழ்தல்-ஞான வழியுமாம்

எதை-நினைத்துத் தேடினாலும் இதில்-இருக்கு என்னலாய்
புதைந்திருக்க லாக-ஞானம் கீதை-தன்னில் உள்ளதாய்
கொள்ள-நாமும் தேடக்-கிட்டும் உண்மை-பதில் நல்லதாய்
புரியும்-கருமம் சிறிய-இன்பப் பலனைத்-துறத்தல் என்பதே
 

1.7   ஆன்மப்-பற்றைப் பற்றிடும் ஆசை-ஒன்றே கொண்டிரு

ஆன்மப்-பற்றைப் பற்றிடும் ஆசை-ஒன் றே கொண்டிரு
ஆன்மம்-தன்னின் நுண்ணிய தன்மை-என்ன என்பதை
அறிய-ஆசை கொண்டிரு ஊன-உடலின் உள்ளினும்
மேன்மை-தங்கி இருக்குது அதனை-உணர முயன்றிடு 

உனதுடலே கோவிலாம் தூய்மை-கொண்ட நெஞ்சமே
தெய்வ-சன்னி.. தானமாம் உன்-முயற்சி உள்-முயற்சி
மட்டும்-உண்மை பூஜையாம் என்ற-உண்மை உணர்ந்திடு
என்று-கண்ணன் சொன்ன-கீதை சொல்லும்-வேத சாரமாம்

முள்ளைக்-கொண்டு முள்ளெடு என்பதுபோல் பற்றினைக்
கொண்டு-பற்றை எடுத்திடு என்று-குறள் கூறுது
அந்த-பற்று என்னது என்றறிந்து பிழைத்திடு
உள்ளிருக்கும் ஆத்துமம் மீதில்-பற்று கொண்டிடு

அந்த-பற்று ஒன்றையே பற்றி-நீயும் முயன்றிடு
மற்ற-எந்தப் பற்றையும் பற்றிடாமல் வாழ்ந்திடு
என்றிருக்க..லாகுது பஞ்சகத்தின் கூற்றிது
அந்த-பற்றும் விட்டிட பற்றிலாமல் ஆகிட

வந்த-சர்வ வ்யாபக அந்த-சர்வ ஞாபக
நிலையை என்ன-சொல்வது அதுவே-பரமம் என்பது
 மனிதப்-பிறப்பு என்பதெ..தேச்சையல்ல வென்பது
சங்கரர்தன் வாக் கில்-*வி..வேகமாக மிளிருது
மனிதப்-பிறப்பு அரியது அதனின்-அரிது அறிவது
அதனின்-அரிது இறைவனை அறியும்-ஆர்வம் கொள்வது
அதனின்-அரிது வேதமெய்ப் பொருள்-உணர்தல் என்பது
அதனின்-அரிது மெய்யின்-மெய் ஞானம்-கொண்டு உய்வது

(*விவேக சூடாமணி)
 
**உண்மை-ஞானம் உணர்ந்திட ஆவல்-கொண்ட மனைவியை
நோக்கி-யஞ்ய வல்கியர் சொன்ன-போத..மும்-இதே
காசு-பணம் செல்வம்-தன்னை கொண்டு-உண்மை அறிதலை
அடைதல்-என்ப...தாகாது மற்றும்-உனக்கு பிரியமாம்

எதற்கெனவும் முக்தியை அடைதல்-என்ப..தாகாதே
எதையும்-பிரிய...மாக்கிடும் அடையும்-துரிய..மாகிடும்
ஆன்ம-ஆசை தன்னினால் மட்டும்-முக்தி கிட்டுது
எனவே-ஆன்மம் உணர்த்திடும் த்யானம்-தன்னைக் கொண்டிடும்
பேர்க்குத்-தானே கிட்டிடும் ஞானம்-தரும் முக்தியும்

(** ப்ருஹதாரண்ய உபநிஷத்.II.iv.5) 

 
ஆன்ம-ஆசை ஒன்றையே பக்தி-என்று சொல்லுவர்
அந்த-ஆசை தன்னையே யோகம்-என்றும் கூறுவர்
அதனைக்-கணமும் பூசையாய்க் கொள்தல்-வேண்டும் என்பதே
பஞ்சகத்தின் பாடமாம் இதனை-உணர்தல் வேணுமாம்
*கண்ணன்-கீதை தன்னிலே சொன்ன-ஞானம் என்னது

பிரிந்திருக்கும் பலதிலே பரந்திருக்கும் ஒன்றையே
கண்டு-கொள்ளல் தானது ஆன்ம-ஞானம் என்பது
அண்டம்-அணுவில் அடங்குது அண்டம்-அணுவின் பலதது
என்பது போல் தானது ஆத்ம-ஞானம் என்பது
விளங்கிடாத வரையிலே நம்பிக்கையாய் முயன்றிடு

* கீதை-18-20


பிரிந்திடாத ஒன்றுமாய் பிறந்தவற்றுள் இருக்குது
பிறந்ததிங்கு கோடியின் கோடியாகத் தெரியுது
அவற்றினுள்ளின் உள்ளுமாய் பிரிந்திடாத முழுதுமாய்
ஆன்மம்-என்று இருக்குது அமைதியாக இயக்குது

* கீதை-13-17

வேத-புருஷ சுக்தமும் யாதவனின் கீதையும்
சொல்லும்-செய்தி யாவுமே ஒன்று-ஒன்று ஒன்றுமே
பதஞ்சலியின் யோகமும் த்யானப்-பொருள் சாதகர்
த்யானம்-மூன்றும் கலப்பதே சமாதி-என்று சொல்லுது 

சங்கரரின் பஞ்சகம் கூட-இதனைச் சொல்லுது
*சாதகமாய் தன்னையே அறியும்-முயற்சி கொண்டிட
யாதுமாகி எங்கணும் என்றும்-நிற்கும் பரமனை
காணப்-பெரும் சூழ்நிலை சாதகமாய் அமையுது

*சாதகம்=ஆமீகச் சாதனை

1.8     ஆன்மம்-தன்னைக் கண்டிட முயன்றுன்-னுள்ளே தேடிடு


ஆன்மம்-தன்னைக் கண்டிட முயன்றுன்-னுள்ளே தேடிடு
சொந்தமான இடத்தை-நோக்கி விரைந்து-நீயும் ஓடிடு
எந்த-இடத்தில் இருந்து-நீயும் வந்தனையோ அவ்விடம்
தன்னை-நோக்கி கடகட.. வென்று-நீயும் புறப்படு

கட்டி-இருக்கும் தளையிலிருந்து பிரிந்து-நீயும் சென்றிடு
தளைகள்-உன்னைக் கட்டவில்லை என்று-நீயும் உணர்ந்திடு
தளைகளை-நீ கட்டி-இருக்கும் நிலையறிந்து விட்டிடு 
விலையில்லாத சத்-பொருளுன் உள்ளுக்குள்ளே அறிந்திடு

 தளைகள்-விடுதல் என்பது துறவு-என்றே ஆகுது
துறவு-என்ற சொற்பதம் செயல்-விடுதல் அன்றது
செயல்கள்-செய்யும் பாங்கிலே துறவு-இருக்கு அறிந்திடு
செயலின்-பலனைத் துறப்பது உண்மையான துறவது


Prev           First              Next
 
____________________
 

 

No comments:

Post a Comment