Monday, April 27, 2015

3. ஸ்லோகம் மூன்று - வேத (அ)த்யாயனம்


Meaning of the Supreme Statement should be reflected upon.
One should take shelter under scriptural statements.
One should remain aloof from perverse arguments.
One should be receptive to scriptures, clarifications and debates.
‘I am Brahman’ – thus one thought should be fully experienced.
One should give up constant and continuous ego-sense.
One should discard the idea that ‘I am the body’.
Contentious arguments with men of Wisdom should be avoided.
________________
 
 
பிறகு-ஞானம் தோன்ற-வேத வாக்கியத்தை நினைத்திடு

 நாலு-வேதத் தருவின்-நிழலில் அமர்ந்து-அதனை வழிபடு

 போதும்-எந்தன் வாதப்-பித்து என்று-நன்றாய் முடிவெடு

 வேதம்-சொல்லும் ஞானம்-பெறும் யோக்கியத்தை வளர்த்திடு

 உண்மை-உணர உன்னை-மறந்து உண்மையோடு கலந்திடு

 தன்மையற்ற தன்மைத்தான தன்மை-தன்மை துறந்திரு

 உன்னை-உடலென் றெண்ணும்-எண்ணம் தன்னை-நீ துறந்திடு

 சாதனையில் ஞானியர்பால் வாக்கு-வாதம் விடுத்திடு
___________________


3.1   பிறகு-ஞானம் தோன்ற-வேத  வாக்கியத்தை நினைத்திடு

பிறகு-ஞானம் தோன்ற-வேத வாக்கியத்தை நினைத்திடு
நினைத்த-அதனை நினைத்து-அதனின் பெருமை உணர-முயன்றிடு
உணர்ந்த-அதனை உணர்ந்த-பிறகு உருகி-அதனில் கரைந்திடு
கரைந்த-பிறகு அதுவும்-நீயும் ஒன்றெனவே-அறிந்திடு


ஞானம்-கொண்டு மாற்றம்-அடைதல் ஞானம்-அல்ல புரிந்திடு
உணர்ந்தநிலை தன்னில்-இருத்தல் ஞானம்-என்று புரிந்திடு
உண்மைப்-பொருளின் அறிவு உண்மை ஆதலல்ல உணர்ந்திடு
நன்மை-சேர்க்கும் அந்த-அறிவு உதவ-என்றே அறிந்திடு
 
·        Awareness is not a state of becoming, but of being, needing knowledge as a guide, wisdom being the culmination.Sankara cautions us not to be tranquilized by the rhythmic sound of manthra, but reflect on them after understanding the meaning.

For example reciting of Vedham after knowing the chanting of matras rythmatically is not enough.. in fact, Sankara cautions that being a tranquilizer. We need to transcend it and reflect on the meaning of scriptures and meditate on the meaning of the maha-vakyas like

Aham Brahmaasmi, So-hum, …etc.

 


3.2  நாலு-வேதத் தருவின்-நிழலில் அமர்ந்து-அதனை வழிபடுநாலு-வேதத் தருவின்-நிழலில் அமர்ந்து-அதனை *வழிபடு
பாலில்-இருக்கும் நீரைப்-பிரிக்கும் அன்னம்-போல உண்மையை
பிரித்து-எடுக்கும் திறமை-தன்னை அடைய-நீயும் முயன்றிடு
வேதம்-உனக்கு பாதை-காட்டும் அதனை-உணர முயன்றிடு

*வழிபாடு என்பது எந்திரத்தனமாகச் செய்யும்  யாகம் பூஜை என்பன அல்ல. அவைகளை எதற்குப் புரிகிறோம் என்ற உணர்வினில் செயல்படுதலே ஆகும். வேதப் பொருள் உணர அதனை த்யானித்து முயல்வதே வழி பாடு ஆகும். வேத கோஷமோ, மந்த்ர தந்த்ரமோ அல்ல. இவை எல்லாம் தேவை இல்லை எனும் பொருள் கொள்ளற்க. இவை எல்லாம் என்ன , எது வரை என்று உணர்க என்பதே மேற் கூறியவற்றின் நோக்கம்.

பாதை-தன்னைப் பார்த்துப்-பார்த்து நிற்றல்- ஊரில் சேர்க்குமோ
பாதை-தன்னில் காலெடுத்து நடந்து-செல்லல் வேண்டுமாம்
வேதம்-கற்றல் வேதம்-ஓதல் என்பதெல்லாம் இறைவனை
அடையும்-வழியைக் காட்டி-நிற்கும் எனினும்-அதனின் உட்பொருள்
 தன்னை-உணர்தல் வேண்டும்-என்ற முயற்சி-உனக்கு வேணுமாம்
 பின்னர்-வேதம் ஓதல்-என்ப தென்ன-வென்று விளங்குமாம்
 

  3.3 போதும்-எந்தன் வாதப்-பித்து என்று-நன்றாய் முடிவெடு


போதும்-எந்தன் வாதப்-பித்து என்று-நன்றாய் முடிவெடு
நாளும்-இரவும் த்யானம்-செய்து ரிஷிகள்- கண்டு சொன்னது
ஒன்றுக்கொன்று முரண்வது-போல் உனக்குத்-தோற்றம் அளிப்பது
உந்தன்-குறை என்பதை-நீ அறிந்து-நன்றாய் முயன்றிடு
 
ரிஷிகள்-என்றும் தன்னறிவை நம்பி-இல்லை உணர்ந்திடு
விஷய-ஞானம் போன்றதில்லை அவர்கள்-தன்னின் கூற்றது
தெளிந்த-நெஞ்சில் ஸ்புரித்ததனை அவர்கள்-சொல்லில் சொன்னது
இறைவன்-தன்னின் வாய்-மொழியே என்று-நம்பி செயல்படு
 

 3.4 வேதம்-சொல்லும் ஞானம்-பெறும் யோக்கியத்தை வளர்த்திடு

வேதம்-சொல்லும் ஞானம்-பெறும் யோக்கியத்தை வளர்த்திடு
அதனில்-விளங்கும் செய்தி-யாவும் ஐயம்-விலக்கும் என்பது
மனதில்-கொண்டு அதனை-நினைத்து அதனின்-பொருளை உணர்ந்திடு
உனது-திறத்தில் என்று-முடியும் முற்றும்-கற்றல் என்பது
ரிஷிகள்-போன்ற மெய்யுணர்வு கொண்ட-ஞானி ஒருவரை
சத்குருவாய்த் தேர்ந்தெடுத்து அவர்க்குச்-சேவை புரிந்திடு
எத்தருணம் அவர்-வாயால் உண்மை-கிடைக்கும் என்றிரு
அத்தகைமை உன்னை-உயர்த்தும் உண்மை-உணர்த்தும் அறிந்திடு

3.5   உண்மை-உணர உன்னை-மறந்து உண்மையோடு கலந்திடு     
உண்மை-உணர உன்னை-மறந்து உண்மையோடு கலந்திடு 
தன்னை-உணரும் நிலையைப்-பெறவே உண்மையாக உழைத்திடு
ஆறு-நூறு ஆனபோதும் சமுத்திரத்தில் கலந்தது
 வேறு-பேரு மறைந்து-பேரு கடல்-எனவே ஆகுது
 
அந்த-பரமன் தன்னிலிருந்து வந்தது-தான் ஜீவனும்
என்ற-உண்மை உணர்ந்த-பிறகு ஜீவன்-பரமனாகுது
இந்த-உண்மை ஞானம்-வந்த பிறகு-அன்றோ கிடைப்பது
அதனைப்-பெறவே உனது-உழைப்பு ஒன்று-தானே உதவுது
 
உலகை-மாயம் என்று-சொல்லல் ஏன்-எதனால் வந்தது
தனதை-மறைத்து உலகைப்-படைத்த இறையே-மாயமாகுது
மனதில்-இதனை உணர-காலம் நிறைய-நிறைய ஆகுது
இதனை-உணர்ந்து கணமும்-இறையை நினைத்து-நீ முயன்றிடு
அறிவு-என்று தினமும்-முயன்று முயன்று-நாமும் வளர்ப்பது
பிறகு-தெரியும் ஞானம்-அல்ல அதற்கு-உதவும் என்பது
எரியும்-விறகைத் தூண்ட-விறகுக் குச்சி-தானே உதவுது
பிறகு-எரியும் நெருப்பில்-அதுவும் கருகித்-தானே போகுது

அறிவும்-ஞானத் தீயை-வளர்க்கப் பயன்படவே செய்யுது
ஞானம்-ஸ்புரிக்க அறிவும்-அதனில் கலந்து-உணர்வு ஆகுது
ஞானம்-என்று சொல்லல்-அறிவு அல்ல-என்று உணர்ந்திடு
ஞானம்-தன்னை உணர்ந்த-மெய்யின் உணர்வு-என்று உணர்ந்திடு
 

3.6  தன்மையற்ற தன்மைத்தான தன்மை-தன்மை துறந்திரு

 *தன்மையற்ற தன்மைத்தான வன்புன்-தன்மை துறந்திரு
உண்மை-உந்தன் தன்மை-யதனை அன்பின்-மூலம் அறிந்திடு
வெண்மை-கொண்ட மனதில்-த்யாகச் சேவை-செய்ய முற்படு
**உண்மையற்ற தீயத்-தன்ன..லத்து-ளோரை விலக்கிடு
 


*தன்மையற்ற-நற்றன்மையற்ற தன்மைத்தான= சுயலநலத்தின் பாற்பட்ட
வன்புன் தன்மை= கொடிய இழிய உணர்வு
**தன்னலத்திலே குறிஎன்று தறிகெட்டிருக்கும் சிறியோரின் சகவாசத்தை விலக்கிடு. உலகின் படைப்புகள் அனைத்தும் இறை உருவு எனினும். அறியாமையால் சிறிதும் பிறர் நலம் நினைக்காமல், சுய நலத்திலும் சுய காரியத்திலும் மட்டுமே குறி-என்று இருப்போரை விலகி இருக்க வேண்டும் என்று கீதையும் சாஸ்திரங்களும் சொல்லுகின்றன. அவர்கள் அறியாமையை நீக்கும் பணி உன்னுடையதன்று. எனவே சத் சங்கத்தில் மட்டுமே இரு. அதற்காக அவர்களை வெறுக்காதே. அசூயை அகற்றி உன்-நோக்கத்தில் முன்னேறு.
 

3.7   உன்னை-உடலென் றெண்ணும்-எண்ணம் தன்னை-நீ துறந்திடுஉன்னை-உடலென் றெண்ணும்-எண்ணம் தன்னை-நீ துறந்திடு
உண்மை-யான நானின்-உணர்வு யாது-என்று அறிந்திட
வெளியில்-அல்ல உள்ளில்-சென்று தேட-முயற்சி செய்திடு
முக்தி-என்ற தன்னுணர்வுத் தன்மையாய் ஆகிடு 

3.8  சாதனையில் வெற்று-வாக்கு வாதம்-தன்னை விடுத்திடுசாதனையில் வெற்று-வாக்கு வாதம்-தன்னை விடுத்திடு
வேதனையில் படுத்தும் அதனில்-சாரம் இல்லை-அறிந்திடு 
நூதனமாய்ப் பேசும்-பலரின் கூட்டுறவை விட்டிடு 
ஆகமமாய் ஆக்கி-வாழ்வை முன்னேற-நீ முயன்றிடு
 
___________________


  

No comments:

Post a Comment