Monday, April 27, 2015

5. ஸ்லோகம் ஐந்து - முமுக்ஷுத்வம்



One should cherish satisfaction in solitude.
One should seek fulfillment in transcendental state of Mind.
One should perceive the entirety of the subtle Self.
This world is to be perceived as His reflection.
Consolidated effect of the earlier Actions should be terminated.
 With intelligent resolve, one should free oneself from the effect of subsequent actions.
The consequence of earlier actions should be terminated conclusively.
In this manner one should establish one’s self in Supreme Brahman.
___________



தனிமை-என்ற தன்னுணர்வை அனுபவிக்கப் பழகிடு
மெய்-கடந்த மெய்யுணர்வை மெய்யைக்-கொண்டு அடைந்திடு
உலகிலுள்ள துன்னிலுள்ள தென்று-நீ அறிந்திடு
பூத-உலகப் பரமனின் ப்ரதிபலிப்பாய் உணர்ந்திடு
முன்னின்-வினை முழுதையும்-நீ கழுவக்-கணமும் முயன்றிடு
வினை-கழிய உனது-புத்தி தன்னைக் கொண்டு உழைத்திடு
பற்றிலாதான் பற்றினை-நீ பற்று-விட பற்றிறு
இப்படியாய்ச் சாதனையைப் புரிந்து-நீயும் வாழ்ந்திடு
_____________

5.1   தனிமை-என்ற தன்னுணர்வை அனுபவிக்கப் பழகிடு

தனிமை-என்ப தென்னவென்று அனுபவித்துப் புரிந்திடு
தனிமை-நாட்டை விட்டு-காட்டில் இருப்பதல்ல அறிந்திடு
பலரின்-இடையில் கிடைக்கும்-தனிமை தன்னை-அடைய முயன்றிடு
எண்ணம்-கூட விடுத்து உன்னில்  இருத்தல் தனிமை உணர்ந்திடு

5.2   மெய்-கடந்த மெய்யுணர்வை மெய்யைக்-கொண்டு அடைந்திடு

 மெய்-கடந்த மெய்யுணர்வை மெய்யைக்-கொண்டு அடைந்திடு
மெய்யதொன்றே திருப்தி-அளிக்கும் என்ற-உண்மை உணர்ந்திடு
மெய்மை-நின்ற மனதில்-தெய்வம் நின்று-வழியைக் கொடுக்குது
மெய்-மறக்க மெய்மை-வந்து மாயத்-திரையை விலக்குது

தெரியும்நிலையில் இருக்குமுனக்குள் *துரிய-மெய்யொன் றிருக்குது
 அறிவினாலே அதனை-அறிய முடியாமலே போகுது
இறைவன்-துணையை வேண்டி-முயல மெல்லத்-திரையும் விலகுது
சிறையில்-உள்ள ஆன்ம-ரூபம் உடலுமல்ல விளங்குது
*Astral/Spiritual body

5.3 உலகிலுள்ள துன்னிலுள்ள தென்று-நீ அறிந்திடு

உலகிலுள்ள துன்னிலுள்ள தென்று-நீ அறிந்திடு
மனத்திலல்ல சிதத்திலல்ல  அதனின்-ஆட்சி நடப்பது
எண்ணமல்ல அறிவு-அல்ல அதற்குத் துணை-நிற்பது
திண்ணமன்ன சாட்சியாக நிற்குமாத்து..மம்-அது
ஆத்துமம்-உன்.. னில்-அமைதி கொண்டு-சாட்சி பூதமாய்
வேறிலா லயம்-தனில் நிலைத்து-தா..னிருக்குது
ஒன்றிடா தலைமனம் தனைப்-பிடித்து எப்படி
ஆத்ம-நுண்ணி..யத்தை-அறிதல் யோசித்திடாய் தினப்படி
இந்த-எண்ணம் தோன்ற-அலையும் மனது-நினைக்கும் நிலைத்திட
வந்த-சாந்தி கொண்டு-தியானம் தன்னில்-மூழ்க முயன்றிடு
பந்தமின்றி வந்த-விடத்தை யோசி-நீயும் யோசி-நீ
அந்த-விடத்தைக் கொண்ட-யோகி ஈசன்-பாதம் யாசி-நீ
அலை-மனம் பிடித்து-நீ யோகம்-என்ற சாதனை
வலைபடுத்தி அதனை-நீ தெளிய-வைக்க முயன்றிடு
உளிக்கரத்தில் கல்லுமோர் சிலையுமாக ஆகுது
நிலைப்படுத்த மனமுமோர் தெள்ளிய-நீர் ஆகுது

தெளிந்தநீரில் துல்லியக் காட்சியாகும் பிம்பமாய்
கனிந்தநெஞ்சின் மென்மையில் மலர்ச்சியாகும் பாசமாய்
விளங்குமந்த நுண்ணிய சாட்சியாகும் ஆத்துமா
துலங்குமிடம் யோகியர் தூய்மையான நெஞ்சமாம்..!
-பதஞ்சலி யோக சூத்திரம்
"ததா த்ரஷ்டு : ஸ்வரூபேஸ வஸ்தானாம் ||”

 5.4   பூத-உலகைப் பரமனின் ப்ரதிபலிப்பாய் உணர்ந்திடு

பூத-உலகைப் பரமனின் ப்ரதிபலிப்பாய் உணர்ந்திடு
பரமனன்றி உலகில்-வேறு ஒன்றுமில்லை என்பது
உனது-சித்தில் பசுமரத்தில் ஆணி-போல அடித்திடு
முயன்று-கரைக்க கல்லும்-கரையும் என்ற-உண்மை நினைத்திரு
 

5.5   முன்னின்-வினை முழுதையும்-நீ கழுவக்-கணமும் முயன்றிடு 

முன்னின்-வினை முழுதையும்-நீ கழுவக்-கணமும் முயன்றிடு
எண்ணிலடங்காத அதை எண்ணிடாமல் கொடுத்திடு
என்னதல்ல உன்னதினி என்று-அவனை இழுத்திடு
செய்யும்-கருமப் பலனும்-எனக்கு இல்லை-உனக்கு என்றிடு
செஞ்சதெல்லாம் போகட்டுமே என்று-அவனுக்..குரைத்திடு
கொஞ்சமேனும் சாதனையைச் செய்து-நீயும் காட்டிடு
அதனைக்-கொண்டு புதுக்-கணக்கு ஒன்றை-விரைந்து தொடங்கிடு
யமனை-வெல்லும் வேலை-தன்னை அவனுக்கு-நீ அளித்திடு
கொஞ்சமும்-நீ தளராமல் கெஞ்சி-அவனை அழைத்திடு
கெஞ்சியுமவன் மசியவில்லை என்னில்-கொஞ்சிக் கூப்பிடு
கொஞ்சிக்-கூட வரலை-என்றால் மிரட்டி-அவனைக் கூப்பிடு
அஞ்சிடாதே அவனின்-நிகர் நீஎனச்-ச..வால்விடு


5.6   வினை-கழிய உனது-புத்தி தன்னைக் கொண்டு உழைத்திடு

வினை-கழிய உனது-புத்தி தன்னைக் கொண்டு உழைத்திடு
உந்தன்-மதியைக் கொண்டு-மனதின் எண்ணங்களைப் பார்த்திரு
அவற்றை-விட  அவற்றை-விட உன்னதத்தைப் பற்றிடு
அதன்-பிறகு யாதுமவன் செயல்-எனவே கண்டிரு

5.7   பற்றிலாதான் பற்றினை-நீ பற்று-விட பற்றிறு

பற்றிலாதான் பற்றினை-நீ பற்று-விட பற்றிறு
முற்றும்-உந்தன் வினை-விலகச் சாதனையில் முயன்றிடு
கரும-வினையைப் புரியும்-கடமை மட்டும்-தானே என்னது
அதற்குப்-பலனை அளிக்க-வேண்டாம் இனிமேல்-அதுவும் உன்னது
என்று- சொல்லி இறைவன்-தாளில் அர்ப்பணித்து-விட்டிடு   
வருவதனை அவன்-அருளாய் ஏற்று-நீயும் வாழ்ந்திரு
பொறுமைதனை பெருமையாகக் கொண்டு-நீயும் இருந்திடு
எருமை-தனில் வரும்-யமனின் பயம்-விலகிடக் காத்திரு  
5.8   இப்படியாய்ச் சாதனை தனைப்-புரிந்து வாழ்ந்திரு
இப்படியாய்ச் சாதனை தனைப்-புரிந்து வாழ்ந்திரு
மாய-வாழ்க்கைக் கடலில்-கரையைக் காணும்வரையில் உழைத்திரு
ஓய்வு-இல்லை ஒழிவு-தொல்லை என்று-அவனில் இருந்திடு
மாயமாகி மாயம்-செய்யும் அவன்-தெரிவான் காத்திரு
அருகணைப்பான் காத்திரு ஒருங்கிணைப்பான் பொறுத்திரு
அவன்-அளிப்பான் பேறது அவன்-நீதான் என்பது …..!
__________

                  Prev     First   Next             

No comments:

Post a Comment